Monday 24 August 2015

Onion Sambar


வெங்காயச் சாம்பார்

தேவையான பொருட்கள்:
1.       துவரம் பருப்பு – 1 கப்
2.       வெங்காயம் (சிறியது) – 15
3.       தக்காளி - 1
4.       சாம்பார் பொடி – 2 ஸ்பூன் (அல்லது மிளகாய் வற்றல், மல்லி வறுத்து பொடி செய்து கொள்ளவும்)
5.       மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
6.       காயப்பொடி – ½ ஸ்பூன்
7.       தாளிக்க எண்ணெய், கடுகு, வத்தல், கருவேப்பிலை.
செய்முறை:
1.       துவரம் பருப்புடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
2.       தோலுரித்த வெங்காயகத்தை எண்ணெயில் வாசம் வரும் வரை வதக்கவும்.
3.       வெந்த பருப்பை நன்கு மசித்து, வதக்கிய வெங்காயத்துடன் சேர்க்கவும். மஞ்சள் பொடி, காயப்பொடி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.
4.       எண்ணெயில் கடுகு, வெந்தயம், வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து இறக்கவும். விரும்பினால் இறுதியில் கொத்தமல்லி தழை வெட்டிச் சேர்க்கவும்.

Tomato chutney


தக்காளி சட்ணி



தேவையான பொருட்கள்:

1.       தக்காளி – 1 (பெரியது)

2.       தேங்காய் – 1 கப் (துருவியது)

3.       மிளகாய் வற்றல் – 5

4.       வெங்காயம் – 3

5.       கருவேப்பிலை

6.       உப்பு

7.       தாளிக்க எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, வத்தல், கருவேப்பிலை.

செய்முறை:

1.       தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2.       எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு வற்றல், வெங்காயம், கருவேப்பிலை, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

3.       வதக்கியபின் தேங்காயுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

4.       பின் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதுடன் சேர்த்து கிளறவும்.


Cocunut chutney


தேங்காய் சட்ணி

தேவையான பொருட்கள்:

1.       தேங்காய் – 1 கப் (துருவியது)

2.       பச்சை மிளகாய் – 2

3.       பூண்டு – 2 பல்

4.       கருவேப்பிலை

5.       உப்பு

6.       தாளிக்க எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, வத்தல், கருவேப்பிலை.

செய்முறை:

1.       தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

2.       பின் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதுடன் சேர்த்து கிளறவும்.

Sambaar





காய்கறி சாம்பார்



தேவையான பொருட்கள்:

1.       துவரம் பருப்பு – 1 கப்

2.       வெங்காயம், பூண்டு – தலா 8

3.       விருப்பமான காய்கள்

(காரட், முருங்கைக்காய், முள்ளங்கி, பீன்ஸ், தக்காளி)

4.       புளிக்கரைச்சல் – ½ கப்

5.       சாம்பார் பொடி – 2 ஸ்பூன் (அல்லது மிளகாய் பொடி, மல்லி பொடி ஒவ்வொரு ஸ்பூன், ஜீரகப் பொடி – ¼ ஸ்பூன்)

6.       மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்

7.       காயப்பொடி – 1/2 ஸ்பூன்

8.       தாளிக்க எண்ணெய், கடுகு, வத்தல், கருவேப்பிலை.

செய்முறை:

1.       விருப்பமான காய்களை வெட்டி வைத்து கொள்ளவும். (சிலர் கத்தரி, காலிப்ளவர், உருளை, அவரைக்காய் விரும்புவர்).

2.       துவரம் பருப்பை நன்றாக வேக வைக்கவும்.

3.       வெந்த பருப்பை நன்கு மசித்து, வெட்டிய காய்கள், உரித்த வெங்காயம், பூண்டு, மஞ்சள் பொடி, காயப்பொடி, காய்களுக்கு தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

4.       காய்கள் நன்கு வெந்ததும் சாம்பார் பொடி, புளி கரைச்சல் சேர்த்து கொதிக்க விடவும்.

5.       பின் தாளிக்க சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து இறக்கவும். விரும்பினால் இறுதியில் கொத்தமல்லி தழை வெட்டிச் சேர்க்கவும்.

Dosai


தோசை


தேவையானவை:

1.       இட்லி அரிசி – 2 கப்

2.       உளுந்தம்பருப்பு – ¾ கப்

3.       உப்பு தேவைக்கேர்ப.

செய்முறை:

1.       உளுந்தம்பருப்பு மற்றும் அரியை கழுவி தண்ணீர் விட்டு, 3 முதல் 4 மணிநேரம் வரை ஊறவைக்கவும்.

2.       ஆட்டுரலில் உளுந்தம்பருப்பை தண்ணீர் தெளித்து நன்கு வெண்ணெய் போல் ஆட்டவும். இதைப்போல் அரிசியையும் தண்ணீர் சேர்த்து ஆட்டவும்.

3.       இரண்டு மாவுகளையும் உப்பு சேர்த்துக் கட்டியாக பிசைந்து புளிக்க விடவும். (இரவு முழுவதம் புளிக்க விடலாம் அல்லது தயிர் சேர்த்து சுமார் 4-5 மணிநேரம் புளிக்க விடலாம்).

4.       தோசை ஊற்றும் போது தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

Idly


இட்லி


தேவையானவை:
1.       இட்லி அரிசி – 2 கப்
2.       உளுந்தம்பருப்பு – ¾ கப்
3.       வெந்தயம் – 1 ஸ்பூன்
4.       உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

1.       உளுந்தம்பருப்பு மற்றும் அரிசியை கழுவி தண்ணீர் விட்டு, 3 முதல் 4 மணிநேரம் வரை ஊறவைக்கவும்.

2.       ஆட்டுரலில் உளுந்தம்பருப்பை தண்ணீர் தெளித்து நன்கு வெண்ணெய் போல் ஆட்டவும். இதைப்போல் அரிசியையும் வெந்தயம் சேர்த்து ஆட்டவும்.

3.       இரண்டு மாவுகளையும் உப்பு சேர்த்துக் கட்டியாக பிசைந்து புளிக்க விடவும். (சுமார் 4-5 மணிநேரம் அல்லது இரவு முழுவதம் புளிக்க விடலாம்).

4.       பின் மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

paal paayasam


பால் பாயாசம்


தேவையான பொருட்கள்:

1.      பால் – 2 கப்

2.      சேமியா – 1 கப்

3.      ஜவ்வரிசி – 1 கப்

4.      சீனி / Condensed milk – 1 கப்

5.      முந்திரி, திராட்சை – ½ கப்

6.      ஏலக்காய் தூள் – ½ ஸ்பூன்

7.      நெய் – 2 ஸ்பூன்

செய்முறை:

1.       சேமியாவை சிவக்க வறுத்து வைத்து கொள்ளவும்.

2.       ஜவ்வரிசியை நன்கு வேக வைக்கவும் (குக்கரில் 3 விசில்).

3.       பாலை அடி கனமான பாத்திரத்தில் காய வைக்கவும்.

4.       பால் நன்கு கொதித்ததும் அதில் வறுத்த சேமியா மற்றும் ஜவ்வரிசி, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.

5.       பின் தேவைக்கேற்ப சீனி / Condensed milk சேர்த்து நன்கு கிளறி மேலும் 2 நிமிடம் வேக விடவும்.

6.       முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்கவும்.