Monday 24 August 2015

Sambaar





காய்கறி சாம்பார்



தேவையான பொருட்கள்:

1.       துவரம் பருப்பு – 1 கப்

2.       வெங்காயம், பூண்டு – தலா 8

3.       விருப்பமான காய்கள்

(காரட், முருங்கைக்காய், முள்ளங்கி, பீன்ஸ், தக்காளி)

4.       புளிக்கரைச்சல் – ½ கப்

5.       சாம்பார் பொடி – 2 ஸ்பூன் (அல்லது மிளகாய் பொடி, மல்லி பொடி ஒவ்வொரு ஸ்பூன், ஜீரகப் பொடி – ¼ ஸ்பூன்)

6.       மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்

7.       காயப்பொடி – 1/2 ஸ்பூன்

8.       தாளிக்க எண்ணெய், கடுகு, வத்தல், கருவேப்பிலை.

செய்முறை:

1.       விருப்பமான காய்களை வெட்டி வைத்து கொள்ளவும். (சிலர் கத்தரி, காலிப்ளவர், உருளை, அவரைக்காய் விரும்புவர்).

2.       துவரம் பருப்பை நன்றாக வேக வைக்கவும்.

3.       வெந்த பருப்பை நன்கு மசித்து, வெட்டிய காய்கள், உரித்த வெங்காயம், பூண்டு, மஞ்சள் பொடி, காயப்பொடி, காய்களுக்கு தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

4.       காய்கள் நன்கு வெந்ததும் சாம்பார் பொடி, புளி கரைச்சல் சேர்த்து கொதிக்க விடவும்.

5.       பின் தாளிக்க சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து இறக்கவும். விரும்பினால் இறுதியில் கொத்தமல்லி தழை வெட்டிச் சேர்க்கவும்.

No comments:

Post a Comment