Monday 24 August 2015

Onion Sambar


வெங்காயச் சாம்பார்

தேவையான பொருட்கள்:
1.       துவரம் பருப்பு – 1 கப்
2.       வெங்காயம் (சிறியது) – 15
3.       தக்காளி - 1
4.       சாம்பார் பொடி – 2 ஸ்பூன் (அல்லது மிளகாய் வற்றல், மல்லி வறுத்து பொடி செய்து கொள்ளவும்)
5.       மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
6.       காயப்பொடி – ½ ஸ்பூன்
7.       தாளிக்க எண்ணெய், கடுகு, வத்தல், கருவேப்பிலை.
செய்முறை:
1.       துவரம் பருப்புடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
2.       தோலுரித்த வெங்காயகத்தை எண்ணெயில் வாசம் வரும் வரை வதக்கவும்.
3.       வெந்த பருப்பை நன்கு மசித்து, வதக்கிய வெங்காயத்துடன் சேர்க்கவும். மஞ்சள் பொடி, காயப்பொடி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.
4.       எண்ணெயில் கடுகு, வெந்தயம், வத்தல், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து இறக்கவும். விரும்பினால் இறுதியில் கொத்தமல்லி தழை வெட்டிச் சேர்க்கவும்.

No comments:

Post a Comment